போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணி

நெல்லையில் போலீசார் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

Update: 2022-01-05 19:35 GMT
நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் முககவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நெல்லை மாநகரம் பெருமாள்புரம், மேலப்பாளையம் போலீசார் நேற்று ஹெல்மெட், முககவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினார்கள்.

பெருமாள்புரம் போலீஸ் நிலையம் முன்பு இருந்து புறப்பட்ட பேரணியை, உதவி போலீஸ் கமிஷனர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் (பெருமாள்புரம்), முத்துசுப்பிரமணியன் (மேலப்பாளையம்) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

பேரணி பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, மேலப்பாளையம் சந்தை முக்கு, ரவுண்டானா உள்ளிட்ட இடங்களின் வழியாக மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தை சென்றடைந்தது. என்.ஜி.ஓ. காலனி விலக்கு பகுதியில் முககவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் முககவசம் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்