சாலையில் கொட்டிய மணல் சறுக்கி தொழிலாளி சாவு 2 பேர் மீது வழக்கு

சாலையில் கொட்டிய மணல் சறுக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2022-01-05 19:33 GMT
சுரண்டை:
கீழச்சுரண்டை ஊர்க்காவல பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரம் (வயது 54). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு சுரண்டையில் இருந்து பரங்குன்றாபுரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். டாஸ்மாக் கடை மேல்புறம் சென்றபோது சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மணல் சறுக்கியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே திடீரென விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சமுத்திரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் விரைந்து வந்து சமுத்திரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சாலை ஓரத்தில் மணலை கொட்டிய டிப்பர் லாரி டிரைவர் கீழச்சுரண்டையை சேர்ந்த மாரியப்பன் (47) மற்றும் இடத்தின் உரிமையாளர் சுரண்டையை சேர்ந்த செல்வம் (50) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்