தென்காசி மாவட்டத்தில் 13½ லட்சம் வாக்காளர்கள்

தென்காசி மாவட்டத்தில் 13½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.;

Update: 2022-01-05 19:21 GMT
தென்காசி:

வாக்காளர் பட்டியல்
தென்காசி மாவட்டத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதனை மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ மனோகரன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தேர்தல் தாசில்தார் கங்கா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

பெண் வாக்காளர்கள் அதிகம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 61 ஆயிரத்து 545 பேரும், மொத்த பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 94 ஆயிரத்து 113 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 66 பேரும் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 55 ஆயிரத்து 724 ஆகும்.
ஆண்களை விட 32 ஆயிரத்து 568 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். மொத்தம் 1,504 வாக்குச்சாவடிகள் 751 இடங்களில் அமைக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்