மாவட்டத்தில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 802 வாக்காளர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 802 வாக்காளர்கள் உள்ளனர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 802 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல்
சிவகங்கை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மணி முத்து, நகர செயலாளர் துரை ஆனந்த், அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜா மற்றும் மாரிமுத்து, பா.ஜ.க. நகர தலைவர் தனசேகரன், மாவட்ட செயலாளர் மார்த்தாண்டன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், நகர தலைவர் பிரபாகரன், தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெரோஸ் காந்தி, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முத்துராமலிங்கம், தே.மு.தி.க. சார்பில் தர்மராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சிவகங்கைமாவட்டத்தில் 1-1-2021-ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணி நடைபெற்றது. இதை ஒட்டி 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், இறந்தவர் பெயர் நீக்கம் செய்தல், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல் மற்றும் மாற்றம் செய்தல் ஆகியவைகளுக்காக விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. நவம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி முடிய மாவட்டத்தில் 27 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள்
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மற்றும் மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த 4 தொகுதிகளிலும் சேர்த்து பெயர் சேர்த்தலுக்கு 14,891 மனுக்கள் பெறப்பட்டன. இதுபோல நீக்குதலுக்கு 7,307 மனுக்களும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 2810 மனுக்களும், மாற்றம் செய்ய 1992 மனுக்களும் சேர்த்து மொத்தம் 27 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன, இவைகளில் பெயர் சேர்த்தலுக்கு தகுதியுடைய 14,774 மனுக்களும். நீக்கத்துக்கு 7269 மனுக்களும், திருத்தம் செய்ய 2514 மனுக்களும், மாற்றம் செய்ய 1967 மனுக்களும் சேர்த்து 26,524 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
விண்ணப்பித்தவர்களில் 476 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 584 ஆண்களும், 6 லட்சத்து 10 ஆயிரத்து 168 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 50 பேரும் உள்ளனர்.மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்பு 11 லட்சத்து 96 ஆயிரத்து 802 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி வாரியாக விவரம்
வாக்காளர் பட்டியலில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் வருமாறு:
காரைக்குடி
ஆண்கள் 1,56,865
பெண்கள் 1,63,201
மூன்றாம் பாலினத்தவர்கள் 45
மொத்தம் 3,20,111
திருப்பத்தூர்
ஆண்கள் 1,44,002
பெண்கள் 1,50,685
மூன்றாம் பாலினத்தவர் 2
மொத்தம் 2,94,689
சிவகங்கை
ஆண்கள் 1,47670
பெண்கள் 1,53,682
மூன்றாம் பாலினத்தவர் 2
மொத்தம் 3,01,354
மனாமதுரை தனி
ஆண்கள் 1,38,047
பெண்கள் 1,42,600
மூன்றாம் பாலினத்தவர் 1
மொத்தம் 2,80,648