தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ஆய்வு

நீடாமங்கலம் அருகே வக்கீல் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என காரில் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-05 18:47 GMT
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே வக்கீல் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என காரில் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ஆய்வு செய்தார் 
வக்கீல்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதியை சேர்ந்தவர் நடேச.தமிழார்வன். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளரான இவர் கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி நீடாமங்கலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 
இவருடைய மகன் தமிழ்ஸ்டாலின்பாரதி(வயது35). வக்கீலான இவர் நேற்று முன்தினம் இரவு நீடாமங்கலம் கடைத்தெருவுக்கு மருந்து வாங்க காரில் வந்தார். கடையில் மருந்து வாங்கிய பின் ஒளிமதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தார். 
சாைல மறியல்
கற்கோவில் ஒத்தபாலம் அருகில் காரில் தமிழ்ஸ்டாலின்பாரதி   சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டை கார் மீது வீசிவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒளிமதி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள் காரில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை 
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணைபோலீஸ் சூப்பிரண்டு  பாலச்சந்தர், நீடாமங்கலம் துணை போலீஸ்சூப்பிரண்டு பயிற்சி இமயவர்மன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. 
சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார் அங்கிருந்து ஒரு மதுபாட்டிலை கப்பற்றினர். கார்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்பதை கண்டறிய அங்கு தடய அறிவியல் ஆய்வு செய்யப்போவதாக போலீசார் தெரிவித்திருந்தனர். 
ஆய்வு
அதன்படி தஞ்சாவூரில் இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ராமச்சந்திரன் நேற்று நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதிக்கு சென்று தமிழ்ஸ்டாலின்பாரதியின் காரையும், கற்கோவில் ஒத்தபாலம் பகுதியில் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நீடாமங்கலம் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த மதுபாட்டிலையும் அவர் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்