திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் சி.பொன்னுசாமி, தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், சின்னண்ணன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் காசி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை கூட்டமைப்புத் தலைவர் ரங்கன் தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் குப்பைகள் கொட்ட இடம் ஒதுக்கித் தரவேண்டும், பேட்டரி வண்டிகளை நகராட்சி நிர்வாகமே பழுதுநீக்கி தரவேண்டும் என்பதை வலியுறுத்தியும் 5 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர்களுக்கு காலணிகள் வழங்கப்படவில்லை, தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க கூடாது, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட மருத்துவ காப்பீடு திட்ட அட்டை இன்னும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகளை கூறியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ஜோதி, கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முடிவில் சரத்குமார் நன்றி கூறினார்.