சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.38 லட்சம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.38 லட்சம்;
சோளிங்கர்
சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அங்கு, கார்த்திகை மாதம் நடந்த பெருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மர், சிறிய மலையில் உள்ள யோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் காணிக்ைக செலுத்துவதற்காக பெரிய மலை யோக நரசிம்மர் கோவில், சிறிய மலை ஆஞ்சநேயர் கோவில், தக்கான் குளக்கரை ஆஞ்சநேயர் சிலை அருகில், ஊர்கோவில் என்ற பக்தோசித பெருமாள் கொவில் ஆகிய இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு இருந்தன.
அதில் 10-க்கும் மேற்பட்ட உண்டியல்களில் கார்த்திகை மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் மட்டும் கோவில் இணை ஆணையர் ஜெயா, காஞ்சீபுரம் தேவராஜசாமி கோவில் உதவி ஆணையர் தியாகராஜன், அரக்கோணம் வட்டம் கோவில் ஆய்வாளர் பிரியா, சோளிங்கர் கோவில் கண்காணிப்பாளர்கள் விஜயன், சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் எண்ணினர்.
அதில் ரொக்கமாக ரூ.38 லட்சத்து 63 ஆயிரத்து 239-ம், தங்கம் 105 கிராம், வெள்ளி 1310 கிராம் கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.