கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திருப்பத்தூரில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கி அறிவுரை வழங்கினார்.

Update: 2022-01-05 18:22 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கி அறிவுரை வழங்கினார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து வருகிறது. மேலும் ஒருவர் ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு முக கவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு அவர் முக கவசம் அணிவித்தார்.

மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். 

மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு சென்று முக கவசம் அணிய வலியுறுத்தி முககவசம் வழங்கினார். பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முக கவசம் அணிய வலியுறுத்தி, முக கவசத்தை வழங்கினார்.

பஸ்சில் ஏற்றக்கூடாது

தொடர்ந்து பஸ்களில் ஏறி பயணிகள் முக கவசம் அணிந்து உள்ளார்களா என்று பார்வையிட்டு முக கவசங்களை வழங்கினார். முக கவசம் இல்லாத பயணிகளை பஸ்சில் ஏற்றக்கூடாது என கண்டக்டர், டிரைவர்களுக்கு உத்தரவிட்டார். 
பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது அதன்படி அனைவரும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். 

கடைகளில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். ஜவுளிக்கடை, தியேட்டர்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்