விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் நகை திருட்டு
கலசபாக்கம் அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
கலசபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த சாலையனுர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், விவசாயி. இவர் நேற்று காலை 100 நாள் வேலைக்காக வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.
பின்னர் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.
மேலும் பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம்.
இதேபோல அந்த பகுதியில் உள்ள அவரது அண்ணன் கார்த்திகேயன் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைக்க முயன்றுள்ளனர். உடைக்க முடியாததால் மர்மநபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.