மேலும் 80 பேர் பாதிப்பு

மேலும் 80 பேர் பாதிப்பு;

Update: 2022-01-05 17:02 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென வேகமெடுத்துள்ளது. நேற்று 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
80 பேர் பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. தினசரி பாதிப்பு 30-க்கு கீழ் இருந்த நிலையில் 50-ஐ தாண்டியது. நேற்று திடீரென அதிகரித்து திருப்பூர் மாவட்டத்தில் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவல் தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த நிலையில் திருப்பூரிலும் நேற்று வேகம் எடுத்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஒருவர் பலி
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 98 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 495 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,028 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்