சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

Update: 2022-01-05 17:00 GMT
திருப்பூர், 
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-6-2020 அன்று 7 வயது மாணவிக்கு பலூன் வாங்கிக்கொடுத்து தனியாக அழைத்துச்சென்று முட்புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவினாசி மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 ஆண்டு சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தில் தனியாக அழைத்துச்சென்று மிரட்டி வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
 நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நடராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமிலா பானு ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்