கிராம தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-01-05 16:44 GMT
திருப்பூர்
தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சிகளில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் உடனடியாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் கோரிக்கை குறித்து பேசினார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயலாளர் செந்தில்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.

மேலும் செய்திகள்