வேளாங்கண்ணி:-
நாகை மாவட்டம் கருங்கண்ணியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டின் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் தேர் பவனி நடந்தது. முன்னதாக சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் மற்றும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. விழாவில் கருங்கண்ணி பங்குத்தந்தை சவரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கருங்கண்ணி கிறிஸ்தவ சமுதாய தலைவர் பிரான்சிஸ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.