விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை;

Update: 2022-01-05 16:34 GMT
ஆனைமலை

ஆனைமலையை அடுத்த கோட்டூர் அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவருடைய மனைவி வள்ளியம்மாள்(66). இவர் கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் வள்ளியம்மாள் நேற்று காலையில் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வள்ளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்