பாலக்காடு திண்டுக்கல் இடையே மின்மயமாகும் ரெயில்பாதைக்கு மின்கம்பம் அமைக்கும் பணி
பாலக்காடு திண்டுக்கல் இடையே மின்மயமாகும் ரெயில்பாதைக்கு மின்கம்பம் அமைக்கும் பணி
உடுமலை,
பாலக்காடு-திண்டுக்கல் இடையே மின்மயமாகும் ரெயில்பாதைக்கு மின்கம்பம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மின்மயமாகும் ரெயில்பாதை
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு முதல் திண்டுக்கல் வரையிலான ரெயில்பாதை முன்பு மீட்டர்கேஜ் ரெயில்பாதையாக இருந்து வந்தது. அதன் பிறகு இந்த ரெயில்பாதை அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டு 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம், பாலக்காடு முதல் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் வரையிலான அகலரெயில்பாதையை மின்மயமாக்க திட்டமிடப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகள் உடுமலை பகுதியிலும் நடந்து வருகிறது.
அதன்படி மின் கம்பங்கள் சரக்கு ரெயிலில் உடுமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் கிரேன் மூலம் தூக்கி, நிறுவும் பணி நடைபெற்றது.
இந்த பணிகளைத்தொடர்ந்து தற்போது மின்கம்பங்களில் மின் வயர்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இந்த ரெயில்பாதை மின்மயமாக்கப்படும்பட்சத்தில் இந்த வழித்தடத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.