பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
முல்லை பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணியில் நிதி மோசடியில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை,
முல்லை பெரியாறு பாசன கால்வாய் புனரமைப்பு பணியில் நிதி மோசடியில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை என்ஜினீ யர்கள் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முறைகேடு
மதுரை மாவட்ட விவசாயிகள் முல்லைப் பெரியாறு அணை யின் பாசன கால்வாய் நீரை ஆதாரமாக கொண்டு பாசனம் செய்து வருகின்றனர். இதில் கடைமடை பகுதியான மேலூர் மற்றும் வாடிப்பட்டி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு பாசன கிளை கால்வாய் 5, 6, 8, 9,11 ஆகிய 5 பகுதி கால்வாய்கள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணி மேற்கொள்ள கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்தது.
அந்த பணி ஒப்பந்தகாரர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் 11 பகுதி கால்வாயில் நடந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாசன கால் வாய்களை முறையாக மராமத்து பணி மேர்கொள்லாமலேயே நிதி முறைகேடாக கையாடல் செய்துள்ளனர்.
இதன் மூலம் அந்த கால்வாயில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 704 ரூபாய் ஒப்பந்தகாரருடன் இணைந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. ஒரு கால்வாயை ஆய்வு செய்தது போன்று மற்ற கால்வாய் பணிகளை ஆய்வு செய்தாலும் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்திருக்கலாம் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
5 பேர் மீது வழக்கு
அந்த காலக்கட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி என்ஜி னீயர்களாக பணியாற்றியவர்களும், தற்போது பணியில் உள்ளவர்களுமான சாலமன் கிருஸ்துதாஸ், முருகேசன், மற்றும் நிர்வாக பிரிவு என்ஜினீயர் பிரபு, கண்காணிப்பு என்ஜினீயர் முருக சுப்பிரமணியம், ஒப்பந்தகாரர் பாஸ்கரன் ஆகிய 5 பேர் பணியாற்றியது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.