சென்னை விமான நிலையத்தில் ரேபிட் பரிசோதனை: வெளிநாடு செல்ல வந்த 18 பயணிகளுக்கு கொரோனா
துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல வந்த 18 பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ரேபிட் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் உள்பட வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் விமானத்தில் ஏறுவற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு ரேபிட் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்றுடன் வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து தோகா, சார்ஜா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வந்தவா்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பல்வேறு வேலைக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்ல இருந்த 18 பேருக்கு செய்யப்பட்ட ரேபிட் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதையடுத்து கொரோனா தொற்று உறுதியான 18 பயணிகளின் விமான பயணத்தை விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்தனர். அதில் பயணிகளில் சிலா் வீடுகளுக்கு சென்று தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று கொள்வதாக விமான நிலைய அதிகாரிகளளிடம் கூறினர்.
ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளான 18 பேரையும் ஆம்புலன்சுகளில் ஏற்றி சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வாா்டுக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஒமைக்ரான் வகையா?
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இந்த 18 பேருக்கும் ஏற்பட்ட தொற்று டெல்டா வைரசா? அல்லது ஒமைக்ரான் வகையை சோ்ந்ததா? என்பதை கண்டறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அதுவரை அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பில் இருப்பாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடந்த ரேபிட் பரிசோதனையில் 18 பயணிகளுக்கு தொற்று கண்டு பிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.