மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.;

Update: 2022-01-04 19:52 GMT
பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜசெல்வம் (வயது 18). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அங்கு கோவில் அருகே சிறிய குடில் ஒன்று அமைத்து, அதற்கு மின்சார பல்பு இணைப்பு கொடுப்பதற்காக, ஒயர் இழுத்துள்ளார். 

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். ராஜசெல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்