ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா

தென்காசியில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்கள் வசித்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-04 19:50 GMT
தென்காசி:
தென்காசியில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்கள் வசித்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தென்காசியில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே குடும்பத்தில் உள்ள 2 குழந்தைகள் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தடை

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தென்காசி நகராட்சி சுகாதார துறையினர் அந்த தெருவிற்கு ‘சீல்’ வைத்து தடுப்புகள் வைத்து யாரும் உள்ளே செல்லாத அளவில் ஏற்பாடு செய்துள்ளனர். அந்தப் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று வெகுவாக குறைந்து இயல்பு நிலை திரும்பி பல நாட்கள் ஆன நிலையில் மீண்டும் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா? என்று கேட்டபோது தென்காசி மாவட்டத்தில் இதற்கான அறிகுறி இல்லை என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்