ஆர்ப்பாட்டம்
தென்காசியில் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசாக பொருட்களுடன் ரூ.2,500 வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையில் பானைகளை ஏந்தி அதனை உடைப்பதாக அறிவித்தனர். ஆனால் போலீசார் அதனை தடுத்து பானைகளை வாங்கி சென்றனர்.