காவலாளியை கொலை செய்தவர் கைது

காவலாளியை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-01-04 19:44 GMT
புதூர், 
மதுரை சிலைமான் அருகே கல்மேடு பகுதியில் தனியார் பிளாட்டில் காவலாளியாக கண்ணன் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சிலைமான் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கல்மேடு பகுதியை சேர்ந்த வைர பிரகாஷ் (வயது 35) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சம்பவத்தன்று குடிப்பதை கண்டித்ததால் ஆத்திரத்தில் கண்ணனை வைர பிரகாஷ் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் வைர பிரகாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்