முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:
பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் உதவி ஆணையாளர் ஜஹாங்கிர் பாஷா, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பாளையங்கோட்டை மார்க்கெட், தெற்கு பஜார் ஆகிய பகுதிகளில் முககவசம் அணியாமல் வந்த மற்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த பொதுமக்கள் மற்றும் 16 கடைக்காரர்கள் எச்சரிக்கப்பட்டு ரூ.3 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.