கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராதிகா(வயது 39). இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆனநிலையில் குழந்தை இல்லாததால் ராதிகா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் எலி மருந்தை(விஷம்) தின்றார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.