தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-01-04 19:22 GMT
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே உள்ள கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் (வயது47), கூலித்தொழிலாளி. இவருக்கு சுதா (38) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தங்கப்பன் மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை அவரது மனைவி சுதா கண்டித்தார். இதனால், மனமுடைந்த தங்கப்பன் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார்.   இந்தநிலையில் சம்பவத்தன்று தங்கப்பன் சப்பமாமூடு பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்