போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை

போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை

Update: 2022-01-04 19:14 GMT
திருச்சி, ஜன.5-
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் ஆரோக்கிய அருள்பிரிட்டோ(வயது 20). கல்லூரி மாணவரான இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் திருச்சி ஓடத்துறை ரெயில்வே கேட் அருகே நடந்து சென்றார். அப்போது 2 பேர் அவரது செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து அவர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இந்தநிலையில் சோமரசம்பேட்டையை சேர்ந்த வக்கீல் சிவா என்பவர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீசார் விசாரித்து வரும் நபரை பார்க்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டரிடம் கூறியதாக தெரிகிறது. அப்போது அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தகாத வார்த்தையால் பேசியதாக மற்ற வக்கீல்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த வக்கீல்கள் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் உதவி கமிஷனரிடமும் வக்கீல்கள் மனு அளித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்