ஓடையில் மூழ்கி மாற்றுத்திறனாளி சாவு

திசையன்விளை அருகே ஓடையில் மூழ்கி மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-01-04 19:14 GMT
திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அம்புரோஸ் (வயது 38). வாய்பேச முடியாத மாற்றுதிறனாளியான இவர் கடந்த 1-ந் தேதி வெளியே சென்றார். பின்னர் 2 நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குமாரபுரம் அருகில் உள்ள தாம்போதி ஓடையில் குளிக்கச் சென்றது தெரியவந்தது. போலீசார் கொடுத்த தகவலின்பேரில் திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேர தேடுதலுக்கு பின்னர் ஓடையின் தாம்போதி பாலம் அருகில் இருந்த முட்புதருக்குள் அம்புரோஸ் உடலை அழுகிய நிலையில் மீட்டனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்