பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு
அருப்புக்கோட்டை, சாத்தூரில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
சாத்தூர்,
சாத்தூர் தென்வடல் புதுத்தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ரகுராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பையை வழங்கினார். இதில் கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் சீதாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயலட்சுமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நிர்மலாகடற்கரை ராஜ், தி.மு.க. நகர செயலாளர் குருசாமி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ், ம.தி.மு.க. நகர செயலாளர் கணேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல அருப்புக்கோட்டை பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். வெள்ளைகோட்டை, ஆத்திபட்டி, ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கினார். இதில் கலெக்டர் மேகநாதரெட்டி, தாசில்தார் அறிவழகன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், பிரமுகர் சீனிவாசகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.