ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் சீரமைக்கும் பணி
பனப்பாக்கம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது.;
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே தென்மாம்பாக்கம் பகுதியில் விவசாயம் செய்து வந்தவர்கள் தங்கள் நிலங்களுக்கு அருகில் உள்ள கச கால்வாயினை ஆக்கிரமிப்பு செய்து கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் தென்மாம்பாக்கம், எஸ்.கொளத்தூர், ஜாகிர்தண்டலம், ரெட்டிவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவையடுத்து கடந்த 2 நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுப்பணித்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று 2-வது நாளாக தென்மாம்பாக்கம் கச கால்வாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ள இடங்களை பொக்லைன் எந்திரத்தை கொண்டு கச கால்வாய் சீரமைக்கும் பணி உதவி பொறியாளர் கண்ணன் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்புடன் நடந்தது.