தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-01-04 18:26 GMT
புதுக்கோட்டை
சிமெண்டு சாலை  அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் கிழக்கு புதியகாலனி பகுதியில் தெருக்களில் சேறும், சகதியுமாக  உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.  எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகரம்சீகூர் புதியகாலனி பகுதியில் சிமெண்டு சாலை அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அகரம்சீகூர், பெரம்பலூர். 
 
ரேஷன் கடைக்கு வரும் மக்கள் அவதி
கரூர் மாவட்டம், வெள்ளியணை கூட்டுறவு வங்கிக்கு கட்டுப்பட்ட ஜல்லிப்பட்டி பகுதி நேர ரேஷன் கடை முன்பு கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் ரேஷன் கடைக்கு வரும் பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வெள்ளியணை, கரூர். 
 
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, வெண்மான்கொண்டான் கிராமம் ஆட்டுக்காரன் தெருவில் அய்யனார் கோவில் செல்லும் பாதையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதையின் நடுவில் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வெண்மான்கொண்டான், அரியலூர். 

எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர். 
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் சாலையில் உள்ள வேலூர் ஊராட்சி புதுவேலூர் கிராமத்தில் கடந்த 3 மாதமாக உயர்மின்  கோபுர விளக்கு எரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை  முறையிட்டும் சரி செய்யவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் இந்த சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 பொதுமக்கள், செட்டிகுளம், பெரம்பலூர். 

தெருநாய்களால் தொல்லை
புதுக்கோட்டை தெற்கு 3-ம் வீதி மேல 3-வது தெருவில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்கள் கடிக்க வருவதுடன் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புதுக்கோட்டை. 

குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நல்லறிக்கை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிதாக பிரதமர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயும் சரிவர அமைக்கப்படவில்லை. இதனால் நன்றாக வந்த குடிநீர் குழாயில் குடிநீர் வராமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நல்லறிக்கை, பெரம்பலூர். 
 
நோய் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், கோ- அபிஷேகபுரம் கோட்டம்  45-வது வார்டு கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சின்னமிளகுபாறை பகுதியில் ஆங்காங்கே குப்பைகளாகவும், மரக்கிளைகளாகவும் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சின்னமிளகுபாறை, திருச்சி. 
திருச்சி இனாம் சமயபுரம் ஊராட்சியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஊராட்சி சார்பில் வைக்கப்பட்ட குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது. மேலும் இவற்றை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இனாம் சமயபுரம், திருச்சி. 
திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஊழியர்கள் குவாட்டர்ஸ் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இவை காற்று அடிக்கும்போது சாலையில் பறந்து சென்று ஆங்காங்கே விழுந்து வருவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கந்தசாமி, திருச்சி. 

பயனற்ற அங்கன்வாடி மையம் 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம் சேதுராப்பட்டி கிராமம் கும்பகுறிச்சியில் வசிக்கும் குழந்தைகளுக்காக அப்பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது. இந்த அங்கன்வாடி மையம் கடந்த 15 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  பக்கத்து  ஊரில் உள்ள அங்கன்வாடிக்கு அழைத்து சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கும்பகுறிச்சி, திருச்சி. 

ஏரிகள் தூர்வாரப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி தொகுதிக்குட்பட்ட கொளக்குடி, அப்பணநல்லூர், அம்மன்குடி ஆகிய பகுதிகளில் 3 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடுபோல் காட்சி அளிப்பதுடன், இந்த ஏரிக்கு வரும் வரத்து வாரிகள் தூர்வாரப்படாமல் மழைபெய்யும்போது இந்த ஏரிகளுக்கு போதுமான அளவு மழைநீர் வராமல் தற்போது இந்த ஏரிகள் தண்ணீர் இன்றி காணப்படுகின்றன. கொளக்குடி ஏரிக்கு 3 கிலோ மீட்டரில் முள்ளிப்பாடி வாய்க்காலில் காவிரி நீர் ஓடியும், 6 கிலோ மீட்டரில் காவிரியில் கடந்த வருடம் 70 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரியாக நீர் வீணாக சென்று கடலில் கலந்தது. தற்போதும் குறைவாக கடலுக்கு காவிரி வழியாக மழைநீர் செல்கிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவே ஏறக்குறைய 600 கன அடியில் நிரம்பி இருக்கும் எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரிகளை தூர்வாரி கடலில் கலக்கும் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கொளக்குடி, திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி பாரதியார் சாலையில் இருந்து பிரியும் பேர்ட்ஸ் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் 4 சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

சிதிலமடைந்த பாலம் 
திருச்சி பீமநகரையும், பாலக்கரையையும் இணைக்கும் பாலம் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பீமநகர், திருச்சி. 

பிரேத பரிசோதனை கூடம் பயன்பாட்டிற்கு வருமா? 
திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூட கட்டிடம் பழுதாகி இருந்த நிலையில் தற்போது மாற்று இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.  இதனால் புதிதாக பிரேத பரிசோதனை கூட கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இந்த கட்டிடம் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிதாக கட்டப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், லால்குடி, திருச்சி. 


மேலும் செய்திகள்