வெடி விபத்தில் மேலும் ஒருவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடி விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள களத்தூர் நாகலாபுரம் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த மங்களம் பகுதியை சேர்ந்த முனியாண்டி (வயது 35) என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.