ஒடுகத்தூர் அருகே உடலில் கல்லைக்கட்டி கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை
ஒடுகத்தூர் அருகே என்ஜினீயர் ஒருவர் உடலில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துதற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே என்ஜினீயர் ஒருவர் உடலில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துதற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயர் தற்கொலை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த பலாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மகன் யுவராஜ் (வயது 30). என்ஜினீயரான இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. கடந்த வாரம் இவரது தாத்தா இறந்து விட்டார். இதனால் ஒரு வாரமாக யுவராஜ் கவலையுடன் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாலை 3 மணி வரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
மாலை 5 மணிக்கு குருவராஜபாளையம் டாஸ்மாக் எதிரே உள்ள கிணற்றின் அருகே யுவராஜ் அணிந்திருந்த செருப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அது குறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் பாலாஜி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் தேடினர். ஒரு மணி நேரம் நடந்த தேடலுக்கு பிறகு யுவராஜின் உடலை அவர்க் மீட்டனர்.
உடலில் கல்லைகட்டி
அப்போது அவரது உடலில் கல் கட்டப்பட்டிருந்தது. மேலும் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது அதில் என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. அதிக அளவில் எனக்கு மன அழுத்தம் இருந்ததால் உடலில் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் பெற்றோரை யாரும் அலைக்கழிக்க வேண்டாம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து வேப்பங்குப்பம் போலீசார் யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.