பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நில அதிர்வைு பதிவுசெய்யும் கருவி பொருத்தம்
நிலஅதிர்வை பதிவுசெய்யும் கருவி பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் பொருத்தப்பட்டது.
பேரணாம்பட்டு
நிலஅதிர்வை பதிவுசெய்யும் கருவி பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் பொருத்தப்பட்டது.
நில அதிர்வு
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேரணாம்பட்டு சுற்றுப்புற கிராமங்கள், பேரணாம்பட்டு நகரில் தரைக்காடு, குப்பை மேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பீதியடைந்தனர். 40 வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 29-ந்் தேதி தரைக்காடு பகுதியில் ஐதராபாத்தை சேர்ந்த மத்திய குழுவினர் முதல் கட்ட ஆய்வு செய்தனர்.
அடுத்த கட்டமாக நில அதிர்வு பதிவு செய்யும் சீஸ்மோகிராப் கருவியை பொருத்தி ஆய்வு செய்யப்பட்ட பின்னர் நில அதிர்வுக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும் என தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று மதியம் பேரணாம்பட்டு பகுதியில் நில அதிர்ரை கண்காணித்து பதிவு செய்யும் சீஸ்மோகிராப் கருவியை பொருத்த புவியியல் மேற்பார்வையாளர் ஒ.பி.சிங் தலைமையில், வி.ஐ.டி. பல்கலை கழக இயற்கை பேரிடர் மேலாண்மைத்துறை பேராசிரியர் கணபதி, சென்னை மூத்த புவியியலாளர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கருவி பொருத்தம்
தொடர்ந்து பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் சீஸ்மோ கிராப் கருவியை பொருத்தினர். இந்த கருவி பேரணாம்பட்டு பகுதியை சுற்றியுள்ள 50 கி.மீ சுற்றளவில் ஏற்படும் நில அதிர்வை பதிவுசெய்யக் கூடிய திறன் வாய்ந்ததாகும் என்று அவர்கள் தெரிவித்தனர். பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் வடிவேல், டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.