தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடி சென்ற ஆசாமிகள்

தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடி சென்ற ஆசாமிகள்;

Update: 2022-01-04 18:01 GMT
முதுகுளத்தூர்
 முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் முஸ்லிம் தெருவில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சில வீடுகளின் கதவை உடைத்து நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார்  விசாரணை செய்ததில் திருட்டு போனது கவரிங் நகை என தெரியவந்தது. மேலும் இது சம்பந்தமாக ராமநாதபுரத்தில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்