645 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

திருப்பத்தூரில் 645 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

Update: 2022-01-04 17:10 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் 645 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் நம்பர் 1 கூட்டுறவு விற்பனை பண்டகசாலையில் 645 பயனாளிகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

 இதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் கொண்ட தொகுப்பு பையை வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன், காரைக்குடி கதிர், மாவட்ட மாணவரணி ராஜ்குமார், தாசில்தார் பஞ்சாபிகேசன், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்