போலீசாரின் வாக்கி டாக்கியை உடைத்தவர் கைது
போலீசாரின் வாக்கி டாக்கியை உடைத்தவர் கைது;
அவினாசி
அவினாசி அருகே உள்ள நல்லி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செந்தில் மகன் யுவராஜ் (வயது 22). டிரைவர். இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில் அவினாசி போலீசார் யுவராஜ் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென யுவராஜ் போலீசாரின் சட்டை பாக்கட்டிலிருந்த வாக்கி-டாக்கியை எடுத்து சுவற்றில் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவினாசி போலீசார் யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.