சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 25 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-04 16:55 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலைப்பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 10 பேரும், புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 9 பேரும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரும், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 392 புகையிலை பாக்கெட்டுகள், 454 மதுபாட்டில்கள், ரூ.25 ஆயிரத்து 300 மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்