புதுடெல்லி வாராந்திர ரெயிலில் போதை பொருட்கள் பறிமுதல்

புதுடெல்லி வாராந்திர ரெயிலில் போதை பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-04 16:33 GMT
புதுச்சேரி, ஜன.
புதுடெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று வாராந்திர ரெயில் வந்தது. இந்த ரெயில் புதுவை-விழுப்புரம் வரும் வழியில் ரெயில்வே குற்றத்தடுப்பு பிரிவு சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிலோமின்ராஜ் தலைமையில் போலீசார் திடீரென்று சோதனை செய்தனர்.
அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் இருக்கைகளுக்கு அடியில் 5-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்த போது குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து    போதை  பொருட்களை  போலீசார் பறிமுதல் செய்து புதுச்சேரி ரெயில்வே பாதுகாப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷிடம் ஒப்படைத்தனர். அவர் வழக்குப்பதிவு செய்து, போதை பொருட்கள் கடத்தியவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றார். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.14 ஆயிரம் ஆகும்.

மேலும் செய்திகள்