ரேஷன் அரிசி பதுக்கிய அரிசி ஆலை உரிமையாளர் மீது வழக்கு
கழுகுமலையில் ரேஷன் அரிசி பதுக்கிய அரிசி ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கழுகுமலை:
கழுகுமலையில் உள்ள ஒரு அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கழுகுமலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் அந்த அரிசி ஆலையில் சோதனை செய்தபோது, தலா 50 கிலோ எடை கொண்ட 35 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி தூத்துக்குடி உணவு பாதுகாப்பு துறை தலைமை காவலர் சேர்மன் வசம் ஒப்படைத்தனர்.
மேலும் ரேஷன் அரிசியை பதுக்கியது தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர் பரமசிவம் (வயது 45) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.