கிருஷ்ணகிரி, சூளகிரி தாலுகாக்களில் சாலையோர ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி, சூளகிரி தாலுகாக்களில் சாலையோர ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கிருஷ்ணகிரி, சூளகிரி தாலுகாக்களில் சாலையோரம் உள்ள 22 ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். அப்போது உணவு தொடர்பாக புகார்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும் ஓட்டல்களில் பணிபுரியும் பணியாளர்கள் தன் சுத்தம் கடைபிடிக்க வேண்டும் என்றும், உணவு சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய சுத்தம் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதேபோல உணவு பரிமாறுபவர்கள் முககவசம், கையுறை, தொப்பி அணிந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.