ரவுடி பேபி சூர்யா மதுரையில் கைது
டிக்-டாக்கில் ஆபாசமாக பேசியது தொடர்பாக ரவுடி பேபி சூர்யா மதுரையில் கைது செய்யப்பட்டார். அவருடன் வசித்தவரும் சிக்கினார்.
திருப்பரங்குன்றம்,
டிக்-டாக்கில் ஆபாசமாக பேசியது தொடர்பாக ரவுடி பேபி சூர்யா மதுரையில் கைது செய்யப்பட்டார். அவருடன் வசித்தவரும் சிக்கினார்.
மதுரையில் கைது
மதுரை திருநகர் அருகே சீனிவாசநகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டை நேற்று போலீசார் சுற்றி வளைத்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த வீட்டில் வசித்த ஒரு பெண்ணையும், ஆணையும் மடக்கி பிடித்தனர். அப்போது, அவர்கள் 2 பேரும் டிக் - டாக் பிரபலங்களான ‘ரவுடி பேபி’ சூர்யா மற்றும் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தர் என தெரியவந்தது.
கோவைக்கு அழைத்துச்சென்றனர்
இதில் சூர்யா திருப்பூரை சேர்ந்தவர் ஆவார். அவர்கள் 2 பேரும் டிக்-டாக் மூலம் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக கோவையில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, அங்குள்ள சைபர் கிரைம் போலீசார் மதுரை வந்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தது தெரியவந்தது. இவர்கள் 2 பேர் மீது மேலும் சில வழக்குகளும் உள்ளன.
கடந்த 3 மாதமாக திருநகர் சீனிவாசநகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் வசித்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.