ரவுடி பேபி சூர்யா, நண்பருடன் கைது

ரவுடி பேபி சூர்யா, நண்பருடன் கைது

Update: 2022-01-04 14:59 GMT
ரவுடி பேபி சூர்யா, நண்பருடன் கைது
கோவை

மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா (வயது35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி தனது பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். 

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக தெரிகிறது. 
சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் (45) என்பவரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூ டியூபில் விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம்  உத்தரவின் பேரில், ரவுடி பேபி மற்றும் சிக்கந்தர் ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் ஜெயதேவி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் மதுரை அருகே பதுங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, நண்பர் சிக்கந்தரை கோவை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். 

மேலும் செய்திகள்