மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் இறந்தார்.

Update: 2022-01-04 14:54 GMT
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட பெருங்காவூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பெருமாள் (வயது 48). இவர் விளங்காடுபாக்கம் துணை மின் நிலையத்தில் ஒயர்மேனாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது பெருமாள் மீது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக ஊழியர்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலில் அடிப்படையில் மணலி புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்வாரிய ஊழியரின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்