மின் வாகன பதிவில் சாதனை

மகாராஷ்டிரா மாநிலம் மின்சார வாகன விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. 2021-22 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மின்சார வாகனங்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒரு வருடத்திற்குள் மாநிலத்தில் மின் வாகனங்களின் பதிவு 153 சதவீதமாக கிடுகிடுவென அதி கரித்துள்ளது. இதில் மும்பையில் மட்டுமே 112 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-04 08:54 GMT
2020-21-ம் ஆண்டுகளுக்கு இடையே 9,415 மின்சார வாகனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021-22-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 23,786 ஆக உயர்ந்துள்ளன. மகாராஷ்டிராவில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 57,386. இது இன்னும் சில மாதங்களில் லட்சத்தை தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மும்பை பகுதியில் 1,500 புதிய மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வாகன பதிவுகளில் 10 சதவீதம் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்று அரசு விரும்பு கிறது.

இது குறித்து நகர்ப்புற போக்குவரத்து ஆர்வலர் கவுரங் வோரா கூறுகையில், ‘‘மின்சார வாகனங்களின் வளர்ச்சி பாராட்டுக்குரியது. இப்போது சாலைகளில் பச்சை நிறத்தில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார கார்களை அதிகம் பார்க்க முடிகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் முறைகள்தான் இப்போதைய தேவை. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு கூடுதல் மானியம் வழங்கி அவற்றை பயன்படுத்துவதை எளிதாக்க வேண்டும். இது மாசுபாட்டை மேலும் குறைக்கும்’’ என்கிறார்.

2030-ம் ஆண்டுக்குள் 30 சதவீத தனியார் கார்கள், 70 சதவீத வணிக வாகனங்கள், 40 சதவீத பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்பது மத்திய அரசின் தொலைநோக்கு திட்டமாக இருக்கிறது. இதில் குறிப் பிடத்தக்க விஷயமாக 80 சதவீத இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை மின்சாரத்தில் இயங்க வைக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர் தயாரிப்பாளராக முன்னிலை வகிக்கும் ஹீரோ எலக்ட்ரிக், பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை 2027-ம் ஆண்டிற்குள் நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்