பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேரன் மனைவி அதிரடி கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேரன் மனைவி அதிரடி கைது.

Update: 2022-01-03 21:05 GMT
மங்களூரு:

பயங்கரவாத அமைப்புக்கு...

  சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் இருந்து ஆட்களை அனுப்பி வைப்பதாக, தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து இருந்தது.

  இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் அனுப்பி வைத்தது, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சிலரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து இருந்தனர்.

என்.ஐ.ஏ. சோதனை

  இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு உல்லால் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. இதனப்பாவின் பேரன், அவரது மனைவிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து இருந்தது.

  இதையடுத்து கடந்த ஆண்டு(2021) ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இதனப்பா, அவரது பேரன் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். அப்போது இதனப்பாவின் பேரன் அப்துல் ரகுமானுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து இருந்தனர். மேலும் அப்துல் ரகுமானின் மனைவி மரியம் என்கிற தீப்தி மர்லா என்பவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கைது-பரபரப்பு

  அப்போது தீப்தி மர்லாவுக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று காலை டெல்லியில் இருந்து வந்து இருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் உலலால் அருகே மாஸ்திகட்டே பகுதியில் வசித்த வரும் தீப்தி மர்லாவின் வீடடிற்கு சென்றனர்.

  பின்னர் தீப்தி மர்லாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிருஷ்ணகுமார், அஜய்சிங், மோனிகா திக்வால் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தீப்தி மர்லா கைது செய்யப்பட்டார். அவரை டெல்லிக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேரனின் மனைவி கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் மங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்