டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளுக்கான தவணை தொகை கட்ட முடியாததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளுக்கான தவணை தொகை கட்ட முடியாததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கார் டிரைவர்
தென்தாமரைகுளம் அருகே உள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்தவர் பால்ராஜா, கட்டிட தொழிலாளி. இவரது மகன் மனோஜ் (வயது26). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
மனோஜ் தவணை முறையில் புதிதாக ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினார். ஆனால் அதற்கான தவணை ரூபாயை கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தவணை தொகை கட்ட வீட்டில் பணம் கேட்டார். வீட்டில் உள்ளவர்கள் பணம் கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. இதனால் மனோஜ் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
விஷம் குடித்து சாவு
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு மனோஜ் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
தற்கொலை செய்த மனோஜ்க்கு சுதிர் (24), ஸ்ரீதர் (22) என்ற 2 தம்பிகள் இருந்தனர். அவர்களில் ஸ்ரீதர் கடந்த ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ேபாது விபத்தில் சிக்கி பலியானார். தற்போது மனோஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளில் ஒரே வீட்டில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.