17 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய திருவாரூர் வாலிபர் கைது

திருப்பூரில் 17 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய திருவாரூர் வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-03 20:19 GMT
ஒரத்தநாடு:
திருப்பூரில் 17 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய திருவாரூர் வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மாணவியுடன் குடும்பம்
தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியை சேர்ந்த 17 வயது  மாணவி ஒருவர் மன்னார்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். 
இந்த மாணவி கடந்த 3 மாதத்திற்கு முன்பு திடீரென வீட்டிலிருந்து மாயமானார்.  இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில் மாயமான மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் தோழி மூலமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவை சேர்ந்த கீழ நம்மங்குறிச்சி பகுதியை  சேர்ந்த  அலெக்ஸ்பாண்டியன் (21) என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டு செல்போனில் பேசி வந்ததும், பிறகு அலெக்ஸ்பாண்டியன் அந்த மாணவியை திருப்பூருக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்தது.
போக்சோ சட்டத்தில் கைது
தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார் திருப்பூருக்கு விரைந்து சென்று அங்கு தங்கியிருந்த அலெக்ஸ்பாண்டியனையும், மாணவியையும் பிடித்து நேற்று பாப்பாநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து 17 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்று குடும்பம் நடத்திய அலெக்ஸ்பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் வாட்டாத்திக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்