விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-03 19:47 GMT
உசிலம்பட்டி, 
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் 58 கிராமபாசன விவசாய சங்க தலைவர் பெருமாள், செயலாளர் முனி யாண்டி, பொருளாளர் உதயகுமார், மற்றும் விவசாயிகள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் நேதாஜி, நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன் மற்றும் சடச்சிபட்டி கிராம பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி சடச்சிபட்டி பெரிய கண்மாய்க்கு 58 கிராம பாசன கால்வாய் மூலம் சிறுபட்டி கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரியும், சிறுபட்டி கண்மாய்க்கரை- சடச்சிபட்டி கண் மாய்க்கும் இடையே இருக்கும் தடைகளை அகற்ற கோரியும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜய்பாஸ்கர், மற்றும் வருவாய் ஆய்வாளர் சுந்தரப்பெருமாள் தலைமை தாசில்தார் கமலேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் போலீசார்பேச்சுவார்த்தை நடத்தினர்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் விவசாயிகள், கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்