பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மற்றும் காயமடைந்தோருக்கும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் நிவாரண நிதி வழங்கினர்.

Update: 2022-01-03 19:39 GMT
விருதுநகர்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மற்றும் காயமடைந்தோருக்கும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் நிவாரண நிதி வழங்கினர்.
 நிவாரண உதவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த 12 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் உத்தரவிற்கிணங்க முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. 
இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி அசோகன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் காசோலையை வழங்கினர். 
ரூ.3 லட்சம்
களத்தூர் கிராமத்தில வடிவேல் முருகன் என்பவர் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி மங்கலம் கிராமம் மேட்டுப்பட்டியை சேர்ந்த குமார் வாரிசுதாரர் நாகலட்சுமிக்கும், மேல ஆமத்தூர் சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பெரியசாமியின் வாரிசுதாரரான மகமாயி என்பவருக்கும், புதுக்கோட்டை கிராமம் பி.பாரப்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் என்பவரின் வாரிசுதாரரான பூபதி என்பவருக்கும், புதுக்கோட்டை கிராமம் பாறைப்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருக்கும் தலா ரூ.3 லட்சம் காசோலை வழங்கினர். இதில் பிரித்திவிராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்