சாலையை சீரமைக்க கோரி பஸ் மறியல்

சாலையை சீரமைக்க கோரி பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது

Update: 2022-01-03 19:21 GMT
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகள் தற்போது பழுதடைந்து குண்டும்- குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரி அந்த பகுதி பொதுமக்கள் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் நேற்று பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமங்கள்) அசோகன், ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பஸ் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடந்தினர். உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்