தரைப்பாலத்தை மூழ்கடித்த பாலாற்று வெள்ளம்

ஆத்தங்கரைப்பட்டி தரைப்பாலத்தை மூழ்கடித்து பாலாற்று வெள்ளம் செல்கிறது. எனவே உயர்மட்ட பாலம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-01-03 19:14 GMT
சிங்கம்புணரி,

ஆத்தங்கரைப்பட்டி தரைப்பாலத்தை மூழ்கடித்து பாலாற்று வெள்ளம் செல்கிறது. எனவே உயர்மட்ட பாலம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தரைப்பாலம் மூழ்கியது

 சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அ.காளாப்பூர் அருகே  அத்தங்கரைபட்டி உள்ளது. இங்கு சுமார் 2O0-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆத்தங்கரைபட்டி சாலையானது அ.காளாப்பூரில் இருந்து சூரக்குடி வழியாக மதுரை-திருப்பத்தூர் நெடுஞ்சாலை செல்வதற்கு குறைந் ததூரம் ஆகும்.. ஆத்தங்கரைபட்டியில் உள்ள தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மீண்டும் தரைப்பாலம் மூழ்கியது.. இதனால் மீண்டும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இருப்பினும் ஒரு சிலர் விபரீதம் புரியாமல் இருசக்கர வாகனத்தில் தரைமட்ட பாலத்தை கடந்து செல்கின்றனர்.

உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-
 ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும் பொழுது சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம்.மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து விடும் என்ற அச்சத்தில் அ.காளாப்பூர் மற்றும் ஆத்தங்கரைபட்டி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கிராம மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் இப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும். இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உயர்மட்ட பாலம் நிரந்தரமாக அமைக்கப்பட வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்